அடுத்த கெமிஸ்ட்ரியை ஒர்க்அவுட் பண்ண தயாராகும் சிம்பு-திரிஷா
கெளதம்மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் காதலர்களாக நடித்த சிம்பு-திரிஷா இருவரும் கொடுத்த அவுட்புட் இளவட்ட ரசிகர்களை உலுக்கி எடுத்தது. அந்த அளவுக்கு காதலின் உச்சம் தொடும் காட்சிகளில் வித்தியாசமான ரொமாண்டிக்கை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால், அப்படியொரு மெகா ஹிட் படத்தில் நடித்தபோதும் அதையடுத்து அவர்களை யாரும் ஜோடி சேர்க்கவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் அவர்கள் இணையப்போகிறார்கள். அதனால் சிம்பு-திரிஷா இருவரும் மீண்டுமொரு காதல் கவிதை எழுத தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
Source : Dinamalar

No comments:
Post a Comment