STR Exclusive Interview | South Scope







Published In SOUTH SCOPE Monthly Cinema Magazie ( May 2014)

இது நம்ம ஆளு டப்பிங் இன்று ஆரம்பம்


கடந்த சில நாட்களாக சிம்பு, நயன்தாரா நடிக்க பாண்டிராஜ் இயக்கும் 'இது நம்ம ஆளு' படத்தைப் பற்றிய வதந்தி அதிகமாக பரவியிருந்தது. இயக்குனர் பாண்டிராஜுக்கும், சிம்புக்கும் பிரச்னை என்றும், அதனால படமே 'டிராப்' ஆகி விட்டதென்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக படத்தின் டப்பிங் இன்று  முதல் ஆரம்பமாக உள்ளதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

சிம்பு 'வாலு' படத்தை முடித்துத் தரவேண்டிய கட்டாயத்தில் இருந்ததாலேயே 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்பை சில வாரங்களுக்குத் தள்ளி வைத்திருந்தார்களாம். 'வாலு' படத்தை சிம்பு முடித்துக் கொடுத்து விட்டதால், மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. சிம்பு, நயன்தாரா பங்கேற்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அதே போல், சிம்புக்கும் நயன்தாராவுக்கும் எந்தவிதமான சண்டையோ, சச்சரவோ இல்லையென்றும் தெரிகிறது. நயன்தாரா மிகுந்த மகிழ்ச்சியுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் புகைப்படத்தையும் இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார்.

சிம்பு, நயன்தாரா மீண்டும் ஒன்று சேர்ந்து நடிப்பதைப் பிடிக்காத யாரோ ஒரு சிலர்தான் வேண்டுமென்றே 'இது நம்ம ஆளு' படத்தைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவதாக சிம்புவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தின் இசை வெளியீட்டை அநேகமாக அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Source : Dinamalar

Diehard Ajith fan, STR talks on Kochadaiiyaan


A diehard fan of Ajith, Simbu like all other is also a fan of superstar Rajinikanth. The young actor was also called little superstar, since his acting career as a child artist. Simbu who had been busy shooting for 'Vaalu', was back in the city recently and watched Rajinikanth starrer Kochdaiiyaan. The youngster who is also known for his style on screen like Rajinikanth, took to social media to share his views on the films.

Simbu tweeted, "Compared to Hollywood obviously the graphics can't match but hatts off to @soundaryaarajni for making this possible..can foresee the future. Must mention ksr the man who knows the mass and @arrahman the legend who has given soul and Anthony was brilliant. Dialogues superooo super." "Kochadaiiyaan was rocking, loved the film. #thalaivar #immortalised thanks to @soundaryaarajni ... proud and happy for u," added Simbu.

Source : Times Of India

சினிமா தொழிலாளர்களுக்காக சிம்பு பாடிய பாடல்


பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த ‘அம்முவாகிய நான்’ படத்தை இயக்கிய பத்மா மகன் இயக்கும் புதிய படம் ‘நேற்று இன்று’. இதில் விமல், ரிச்சர்ட், நிதிஷ், பரணி, ஹரிஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். நந்தகி அருந்ததி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் பிரசன்னாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

பல கோணங்களில் நடக்கும் கதையை மாறுபட்ட திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பத்மாமகன். இப்படம் குறித்து அவர் கூறும்போது,

எதிர்பாராத சம்பவங்களும், திருப்பங்களும் நிறைந்த இத்திரைக்கதை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடக்கும் பயணத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. காட்சிகளை தத்ரூபமாக படமாக்குவதற்காக கடும் சிரத்தை மேற்கொண்டு ஆள் அரவமற்ற சூரிய வெளிச்சம்கூட உட்புக முடியாத அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று காட்சிகளை படமாக்கியுள்ளோம் என்று கூறினார்.

மேலும், இத்திரைப்படத்தில் சினிமாவை மட்டும் நம்பி வாழும் சினிமா தொழிலாளர்களையும் அதற்காக அவர்கள் படும் கஷ்டங்களையும் வாழ்க்கை சூழலையும் பற்றி ஒரு பாடல் வருகிறது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடியதோடு மட்டுமல்லாமல் இப்பாடலுக்கு நடித்தும் கொடுத்துள்ளார்.

26699 சினிமா சார்பில் எஸ்.மாலதி இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். கேரளா, தலக்கோணம், சென்னை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. எஸ்.தணிகைவேல் வழங்கும் இத்திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Source : Maalaimalar,21-MAY-2014


Netru Indru Movie Promo Song Video


Simbu - Gautham project Titled


After Vinnaithaandi Varuvaya there were huge waves of expectation to see Simbu - Gautham menon combo again, and that happen to come true after the untitled movie was announced and started to fix the frames. Earlier it was rumoured that the movie has been titled as "Satendru Maaruthu Vaanilai" but after the teaser which was released in STR's birthday we had the confirmation that the movie is still not yet titled.

It was also rumoured before a month, that the movie has been named as "Peru ennada". The movie is produced under Gautham's own banner "Photon Kathaas" and they have blocked a title in producers council as "Kaatru Vaanga Ponean Kavithai Vaangi Vanthean", this may be the title for this project but we have to wait until any confirmation is made officially. Moreover this name stands to be in Simbu Gautham style.

Source : Top10cinema

சிம்பு, நயன்தாராவுக்கு திரிஷா கொடுத்த விருந்து


நயன்தாரா, சிம்புவுக்கு விருந்தளித்தார் திரிஷா. திரிஷா தனது பிறந்த தினத்தை சமீபத்தில் கொண்டாடினார். இதில் பங்கேற்க தனது நெருங்கிய நண்பர்கள், தோழிகளை அழைத்திருந்தார். திரிஷாவின் எதிரி என்று சொல்லப்பட்டு வந்த நயன்தாரா முதல் நபராக பிறந்தநாள் விழாவுக்கு வந்தார். அவரை கட்டித்தழுவி திரிஷா வரவேற்றார். தொடர்ந்து அமலா பால், ரம்யா கிருஷ்ணன், சிம்பு, சோனியா அகர்வால் உள்பட தோழிகள், நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள். ஹன்சிகாவுக்கும் திரிஷா அழைப்பு விடுத்திருந்தார். அவரால் விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று தகவல் தெரிவித்ததுடன் திரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து பூச்செண்டும், கேக்கும் அனுப்பினார். நள்ளிரவு 12 மணிக்கு திரிஷா கேக் கட் செய்தார். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைவருக் கும் விருந்தளித்தார் திரிஷா. சிம்புவும் நயன்தாராவும் காதலர்களாக இருந்து பிரிந்தவர்கள்.

சில ஆண்டுகள் இவர்கள் பேசாமல் இருந்தனர். ஒருமுறை ஐதராபாத் ஓட்டலில் சந்தித¢தபோது இவர்களுக்குள் மீண்டும் நட்பு மட்டும் மலர்ந்தது. இதையடுத்து இப்போது இருவரும் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் திரிஷா

Published In TAMIL MURASU Daily Evening Tamil News Paper Dated 7-MAY-2014 

Idhu namma aalu shoot starts after vaalu completion - T.Rajendar


சிலம்பரசன் நடித்து வரும் படங்களை பற்றி டைரக்டர் டி.ராஜேந்தர் கூறியதாவது:–

‘‘சிலம்பரசன் நடித்து வரும் ‘வாலு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெறுகிறது. படமாக்கப்பட வேண்டிய 2 பாடல் காட்சிகளில், ஒரு பாடல் காட்சி படமாக்கி முடிக்கப்பட்டு விட்டது. இன்னொரு பாடல் காட்சியையும் படமாக்கினால், அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விடும்.

‘வாலு’ படப்பிடிப்பு முடிவடைந்ததும், சிலம்பரசன்–நயன்தாரா ஜோடியாக நடிக்க, சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். அந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 65 சதவீதம் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள காட்சிகள் விரைவில் படமாக்கப்படும். இந்த படத்தை ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ பாண்டிராஜ் டைரக்டு செய்து வருகிறார்.’’

Published In DAILY THANTHI Daily Tamil News Paper Dated 6-May-2014

Mahat to work in a film titled Simbu


It is a known fact that young actor Mahat Raghavendra of Mankatha and Jilla fame is one of Simbu's thickest friends. Little wonder, then, that his next film will be titled Simbu. "The film's story is such that it requires Simbu's name as the title," Mahat says. And will Simbu be seen in the film too? "Yes, a scene would require his presence," says Mahat.

When we asked Simbu if there could be any actor who would be more apt to be in a film that has his title, he joked saying, "Actually, I have reservations on that, but I've to let him use the title anyway." Coincidentally, the film will be made in Telugu where Simbu will be substituted with Puri Jagannadh .

My love is one, but the girls keep changing - Simbu


On a recent visit to the set of Tamil film Vaalu in Bangalore, ex-lovers Simbu and Hansika were shooting for a song. The lead pair has two more songs to shoot. This, incidentally, is the first time that they are back together on set after their break-up (which Simbu had announced through a press release). Needless to say, it was awkward, with the two maintaining their distance from each other. Here’s how they reacted when we spoke to both of them separately about each other:

HANSIKA ON WORKING WITH SIMBU

When I tweeted about my relationship, I also tweeted that I would never ever talk about it again. There was a press release from the other end, and I refuse to comment about it. Even today, my relationship status will elicit no comment. When it comes to being on the same set, well, I have to complete the film. I’m not working for Simbu, I’m working for the director. I’ve been paid to do this and more than anything it’s my film — it feeds me and makes me a star. I have to respect it. What went down between us was between us. I’m not someone who holds grudges. I won’t go to the media saying, ‘This happened to me or that happened to me.’ I’m not like that. What happened between us was for the good. It’s all in the past, let’s move on. I’m a happy-go-lucky person.

SIMBU ON WORKING WITH HANSIKA 

Working with an ex is not new to me. In fact, for me, it would be different if I were working with a heroine and we were still in a relationship. It is like telling a boy you’ve failed in studies. So many times I’ve failed in an exam. It would be new if I’ve passed one. Basically, for me, it is like God is one, but we have so many religions. The same way, the love that I have is one, but the girls keep changing. I am trying to settle down with one, but they have to understand my love and take it. Maybe, they all like too much pain. Love is a big energy. The fault is with us, we try to bring it into a narrow space and channelize it to one particular person. We should love everything. The way we love our girlfriend, we should put the same energy into everything. But, I’m so used to putting all my love to one particular person. After turning spiritual, I’ve begun to understand the pain and the healing process.

Published In TIMES OF INDIA Daily English News Paper Dated 2-May-2014

என் ‘ஆட்டோகிராப்' நீளமானது: மனம் திறக்கும் சிம்பு


'வாலு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காகத் தயாராகிக்கொண்டிருந்தவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசியதிலிருந்து... 

இரண்டு வருட இடைவெளி விட்டு வரும் 'வாலு' எப்படி வந்திருக்கு?

ரொம்ப நாளா பழைய சிம்புவைக்காணும்னு நினைக்கிற வங்களுக்கு ‘வாலு' சரியான படமா இருக்கும். ‘வாலு' படத்துல தோணுறதை உடனே பேசுற கேரக்டர். படத்தின் வசனங்கள் முக்கியமானவை.

அப்படீன்னா பஞ்ச் டயலாக் நிறைய இருக்கா? 

படம் முழுவதுமே பஞ்ச் டயலாக்குகள் தான். ‘பொண்ணுங்க கொளத்து தண்ணில இருக்கிற கொக்கு மாதிரி, தண்ணி வத்தி போயிடுச்சுன்னா கொக்கு பறந்து போயிடும். ஆனா பசங்க அதே தண்ணில இருக்குற மீன் மாதிரி, தண்ணி வத்தி போயிடுச்சுன்னா, மீன் அங்கே செத்துடும்'இந்த மாதிரி வசனங்கள் நிறைய இருக்கு.

2 வருட இடைவெளி ஏற்பட்டுருச்சே, அப்போ என்ன பண்ணீங்க? 

முதல்ல எனக்குப் புரியல, ஏன் நமக்கு மட்டும் இப்படியிருக்கு அப்படின்னு யோசிச்சேன். நிறைய பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். வந்தப்பவே ஓவரா உழைச்சேன். 28 வயசு ஆனதுக்குப் பிறகு, இப்போ கடைசி 2 வருஷத்தைத்தான் எனக்குன்னு எடுத்துக்கிட்ட நேரமா நினைக்கிறேன். இந்த நேரம் எனக்கு பர்ஸனலா தேவைப்பட்டுச்சு. இந்த நேரத்துல என்னோட படங்கள் வெளியாகாதது வருத்தம்தான்.

நீங்க நடிக்கவில்லைன்னாலும், ஒரு பாடகரா உங்களுடைய பாடல்கள் வந்துக்கிட்டே இருந்ததே? 

எதுக்கு மற்ற படங்களுக்குப் போய் பாடுறீங்கன்னு நிறைய பேர் கேட்டாங்க. பொதுவா நிறைய பேர் மற்றவங்க இசையில பாட மாட்டாங்க. ஆனா எனக்கு அப்படி எண்ணமில்ல. மற்றவங்க மாதிரி நான் எதுக்கு இருக்கணும். நடிகர்களை எடுத்துக்கீட்டிங்கன்னா, அவங்களுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. அந்த மாதிரியெல்லாம் நான் கிடையாது, எனக்குப் பாடப் பிடிக்கும். இப்போ நான் ஒரு ஸ்டார் ஆயிட்டதுனால, மற்ற நடிகர்கள் படங்களில் பாடினா அவங்களுக்கு விளம்பரப்படுத்த உதவியா இருக்கு. 2 வருஷம் படம் வெளியாகாவிட்டாலும், எனக்கு என்னோட ரசிகர்கள் இருக்காங்க. ஆனால் புதுசா வர்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள் இவங்களுக்கு எல்லாம் யாருமே இல்லை. என்னால ஒரு நல்ல விஷயம் நடக்குதுன்னா, அதைப் பண்றதுல தப்பில்லைன்னு நினைக்கிறேன்.

சிம்பு காதலிக்கிறார் அப்படின்னாலே கண்டிப்பா பிரிவுல முடியுதே. என்ன காரணம்? 

காரணம் எப்படிச் சொல்றதுனு தெரியல. ‘ஆட்டோகிராப்' படம் பார்த்திருப்பீங்க, அதுல இயக்குநர் சேரனுக்கே 3 காதலிகள் இருப்பாங்க. நான் சிம்புங்க. கொஞ்சம் யோசிங்க. ஸ்கூல்ல, காலேஜ்ல இப்படி 3 காதலிகள் சேரனுக்கு இருக்குறப்போ எனக்கு இப்போ 30 வயசாகுது. நானும் ரொம்ப சின்ன வயசுலதான் லவ் பண்ணினேன். இந்த உலகத்திலேயே ரொம்ப முக்கியமான எமோஷன் லவ் தான். லவ் பண்றப்போ நம்ம நிறைய விஷயங்கள கத்துக்க முடியுது. கத்துக்கிட்ட விஷயங்கள் நம்மளோட வாழ்க்கைக்கு பாசிட்டிவா தேவைப்படுது, இல்லன்னா நெகட்டிவா தேவைப்படுது. சில பேரு காதல்ல ஜெயிச்சது மூலமா வாழ்க்கையே மாறியிருக்கு. சில பேருக்கு காதல்ல தோற்றது மூலமா வாழ்க்கையே மாறியிருக்கும். எல்லாருக்குமே லவ் ஒரு அனுபவம்தான். பலர் அதை உபயோகிக்காம, கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிறாங்க. நான் அதை சரியா உபயோகப்படுத்தி இருக்கேன்னு நினைக்கிறேன்.

இவ்வளவு பேசுற சிம்பு நல்லவரா, கெட்டவரா? 

சரியோ, தப்போ நான் ஒரு விஷயம் பண்றேன்னா அந்த விஷயம் உடனே போய் ரீச்சாகுது. மத்தப்படி யாருக்கும் நடக்காத விஷயங்கள் ஒண்ணும் எனக்கு நடக்கல. அதனால் நல்லவரா, கெட்டவராங்கிற கவல எனக்கு இல்ல.

உங்களைப் பற்றி வர்ற விமர்சனங்களை எல்லாம் மனசுக்குள்ள வைச்சுக்கிட்டே பேசுற மாதிரியே தெரியுதே? 

சரிங்க. அப்படியே வைச்சுக்கோங்க. அதனால் என்ன பலன் இருக்கு. 10 பேர் எக்ஸ்டராவா என்னோட படத்தை பாத்துருவாங்களா? இல்லன்னா இன்னும் 10 பத்திரிகைல என்னைப் பத்தி நாலு வார்த்தை நல்ல விதமா எழுதுவாங்களா? ஒண்ணுமே கிடையாது.

என்னை விமர்சனம் பண்றாங்கன்னா, அது அவங்களோட பிரச்சினை. என்னோட பிரச்சினையே கிடையாது. ஒரு கட்டத்துல நாம என்ன பேசினாலும் தப்பாகுது, நாம இப்படி இருக்கக் கூடாது போல அப்படின்னு நான் என்னை மாத்தி மாத்தி ஒரு கட்டத்துல தான் என் தவறை உணர்ந்தேன். நான் என்னையே இழந்துட்டேன். இப்போ நீங்க கேட்குறீங்க இல்ல, உண்மையிலயே சிம்புவை கடந்த 2 வருஷமா காணும். நான் இருந்ததுதான் சரி, இவங்களுக்காக மாறி நான் ஏமாந்து போயிட்டேன். அதுதான் என்னோட பிரச்சினை. இப்போ நானா வெளியே வரணும். நான் சாதாரணமாவே நிறைய பேசுவேன். இப்போ நானாவே வந்தா என்ன பேசுவேன்னு யோசிச்சுக்கோங்க.

 நீங்க விஜய்க்கு நண்பர், அஜித்தின் தீவிர ரசிகர். இரண்டு ரசிகர்களையும் எப்படிச் சமாளிக்குறீங்க? 

இந்தப் படத்துலயே அஜித் ரசிகராதான் வர்றேன். வளர்ந்து வர்ற வரைக்கும்தான் அவரு இவருன்னு பேசுவாங்க. ரெண்டு பேருமே வளர்ந்து வந்துட்டாங்கன்னா தப்பா பேச மாட்டாங்க. ஒரு கட்டதுல எம்.ஜி.ஆர். ரசிகன், அப்புறம் ரஜினி ரசிகன், இப்போ அஜித் ரசிகன். இதை நான் சொன்னா விஜய் ரசிகர்கள் என்னைத் திட்டுவாங்களேன்னு, விஜய், அஜித் ரெண்டு பேருக்குமே நான் ரசிகர்ன்னு பொய் சொல்ல விரும்பல. பர்சனலா எனக்கு விஜய் சாரை ரொம்ப பிடிக்கும்.

ஆனால், என்னையும் மீறி திரையில பாக்குறப்போ கை தட்டி, விசிலடிக்குறது அஜித் சாருக்கு மட்டும்தான். அதற்காக எனக்கு விஜய் சாரைப் பிடிக்காதுனு அர்த்தம் கிடையாது.

பேமிலி, குழந்தைங்க இதுல எல்லாம் சிம்புவைப் பாக்குறது எப்போ?

பேமிலி, குழந்தைங்க... கேட்க நல்லாயிருக்கு. அதானே எல்லாரும் பண்றாங்க. உங்களுக்கு எல்லாம் கல்யாணம் செட்டாகுது. எனக்கு செட்டாக மாட்டேங்க்குது. எனக்கு முதல்ல கல்யாணம் செட்டாகுமா, செட்டாகாதான்னு தெரியணும். வாழ்க்கைல இப்போ தான் டிரான்சிஷன் கட்டத்துல இருக்கேன். ஆன்மிகத்துல போயிட்டு இருக்கும்போது, என்னை நம்பி இருக்குறவங்கள நான் எப்படி கட்டாயப்படுத்த முடியும்? நான் பண்றத நீயும் பண்ணணும், உனக்கு அது புரியணும்னு நான் ஒரு கட்டதுக்கு மேல சொல்ல முடியாது. இரண்டாவது நான் தனியா இருக்கும்போதுதான் ஒரு சில விஷயங்கள் பண்ண முடியும். இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சுதான், கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்கணும். இப்போ இருக்குற சூழ்நிலையில், கல்யாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியல.